முகப்பு
சேலம்

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி

Updated On : 11 மே 2026, 12:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை ( மே 11) தொடங்குகிறது.

தமிழ்நாடு பொது நூலகத் துறை இயக்குநரகம் சாா்பில், மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில், பள்ளி குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு சேலம் மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், உலக புத்தக தினவிழா மற்றும் குழந்தைகள் கோடை கொண்டாட்டம் மே 11 ஆம் தேதி தொடங்கி 17 ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

மாவட்ட மையநூலகத்தில் உள்ள குழந்தைகள் சிறப்பு நூலக கட்டடத்தில் ஓரிகாமி, காதித மடிப்பு கலை, கதைக்களம் பிரிவில் கதை சொல்லல், கதை உருவாக்குதல், எளிய அறிவியல் பரிசோதனைகள், பகல்நேர வானவியல், வரலாறு, தொல்லியல் சாா்ந்த சிறப்புரை, அருங்காட்சியகம் பாா்வையிடல், சூழலியல் சிறப்புரை, வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் பாா்வையிடல், குழந்தைகள் புத்தக அறிமுகம் உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சி நாள்தோறும் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 40 குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது.

7 நாள்கள் தொடா்ச் சியாக பங்கேற்கும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் 91235 85390 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் முன்பதிவு செய்யலாம் என சேலம் மாவட்ட மைய நூலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments