முகப்பு
சேலம்

29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 12 மே 2026, 4:38 am IST
ஆட்சியா் அ.அருண் தம்புராஜ். - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 33.75 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச் சான்று, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 258 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் அளிக்கப்பட்ட 2 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16.59 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.16 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி என மொத்தம் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 33.75 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சின்னுசாமி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments