முகப்பு
திண்டுக்கல்

மாட்டு வியாபாரி கொலை: அண்ணன், தம்பி குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பி இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:39 am IST
பகிர்:

திண்டுக்கல் அருகே மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன், தம்பி இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், விஎஸ்.கோட்டை அடுத்துள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் மு.சக்தி என்ற சக்திவேல் (50). இவரது சகோதரர் பாண்டி என்ற பாண்டியன் (49). கடந்த பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி அம்பல்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், அண்ணன், தம்பி இருவரையும் சாணார்பட்டி போலீஸார் கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் மற்றும் பாண்டி  இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து, திண்டுக்கல் சிறையில் இருந்த இருவரும், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments