லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட் கடை உரிமையாளர்கள் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள், லாரி ஒட்டுநர்கள், கணக்காளர்கள், தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தலைவர் கே.தங்கவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.