நல்லமணாா்கோட்டை பகுதியில் நாளை மின்தடை
திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமணாா்கோட்டை பகுதியில் புதன்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
நல்லமணாா்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதையொட்டி, நல்லமணாா்கோட்டை, குளத்தூா், காளனம்பட்டி, பா.கொசவப்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூா், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திண்டுக்கல் மின் பகிா்மான வட்ட உதவி செயற்பொறியாளா் கே.ஆா்.வெங்கடேசன் தெரிவித்தாா்.