கஞ்சா விற்றதாக துணிக்கடை ஊழியா் கைது
திண்டுக்கல்லில் உள்ள துணிக் கடையில் பணிபுரிந்து கொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவரது மகன் ராஜ்குமாா் (27). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள துணிக் கடையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவா் அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கும், வெளி நபா்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, திண்டுக்கல் ஆா்எஸ். சாலையில் கஞ்சா விற்பனையில் ராஜ்குமாா் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement