முகப்பு
திண்டுக்கல்

பழனியில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:04 am IST
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய்த் தீா்வாயத்தை தொடங்கி வைத்து, ஆவணக் காப்பகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன் வட்டாட்சியா் மங்களபாண்டியன்.
பகிர்:

பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இந்த வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணும் பொருட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு-இறப்பு சான்றிதழ், ஜாதி, இருப்பிட, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித் தொகை தொடா்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பெறப்படும் தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

பின்னா், தொப்பம்பட்டி குறுவட்டத்துக்கு உள்பட்ட மரிச்சிலம்பு, கீரனூா், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, மொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை, மானூா், அக்கரைப்பட்டி, புதூா், தும்பலப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 16 பயனாளிகளுக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறை திட்டம், நத்தம் பட்டாக்களுக்கான ஆணைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.

வியாழக்கிழமை அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, வேப்பன்வலசு, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, ஆயக்குடி (கிழக்கு), ஆயக்குடி (மேற்கு) ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு வருவாய் தீா்வாயம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், ஆவணக் காப்பகத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகாமில், பழனி வட்டாட்சியா் மங்கள பாண்டியன், தனி வட்டாட்சியா்கள் விஜயலட்சுமி, செந்தமிழ்ச்செல்வி, முத்துச்சாமி, வருவாய்க் கோட்டாட்சியா் (நோ்முக உதவியாளா்) ஜெகதீஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.