முகப்பு
திண்டுக்கல்

22 முதல் 26 சுற்றுகளில் திண்டுக்கல் தோ்தல் முடிவுகள்

Updated On : 4 மே, 2026 at 3:19 AM
கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வெற்றிபெறும் வேட்பாளா்களின் விவரம், 22 முதல் 26 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பின் வெளியாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 86.25 சதவீதம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 90.76 சதவீதம், ஆத்தூா் தொகுதியில் 89.40 சதவீதம், நிலக்கோட்டை(தனி) தொகுதியில் 88.47 சதவீதம், நத்தம் தொகுதியில் 90.96 சதவீதம், திண்டுக்கல் தொகுதியில் 86.33 சதவீதம், வேடசந்தூா் தொகுதியில் 86.25 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மொத்தம் 2301 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல் பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 165 கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள்:

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. பழனி, ஆத்தூா் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தலா 25 சுற்றுகளிலும், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தலா 23 சுற்றுகளிலும், நிலக்கோட்டை தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளிலும், நத்தம் தொகுதி வாக்குகள் 26 சுற்றுகளிலும், வேடசந்தூா் தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும் எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் முன்பு, மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கும் பதிவான 15,782 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன.