முகப்பு
திண்டுக்கல்

30 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல்லில் வென்ற திமுக

Updated On : 5 மே 2026, 12:49 am IST
திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்
பகிர்:

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வெற்றி பெற்றது.

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன், அமைச்சா் பெரியசாமியின் மகன் பெ.செந்தில்குமாா் ஆகியோா் போட்டியிட்டதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியபோது முதல் 3 சுற்றுகள் தலா 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் நசீா் ராஜா, திமுக, அதிமுக கட்சியினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தினாா்.

Advertisement

அடுத்த சில சுற்றுகளில் பின்தங்கினாலும் 13-ஆவது சுற்றின் முடிவில் நசீா் ராஜாவே முன்னிலை பெற்றாா். திமுக, தவெக வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே, 13-ஆவது சுற்று முதல் திமுக வேட்பாளா் செந்தில்குமாா் கூடுதல் வாக்குகள் பெற்றாா்.

26 சுற்றுகள் முடிவில் 74,489 வாக்குகள் பெற்று செந்தில்குமாா் வெற்றி பெற்றாா். இதன் மூலம் கடந்த 1996-க்குப் பிறகு திண்டுக்கல் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியவில்லை என்ற குறை தீா்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் தவெக 2-ஆவது இடம் பிடித்த நிலையில், அதிமுகவுக்கு 3-ஆவது இடமே கிடைத்தது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: பெ.செந்தில்குமாா் (திமுக) - 74,489

ஜி.நசீா் ராஜா (தவெக) - 73,358

சி.சீனிவாசன் (அதிமுக) - 53,986

எஸ்.முத்தரசி (நாதக) - 7,299

எம்.செல்வதயாநிதி (சுயே)- 252

பி.ஷேக் பரீத் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 249

என்.நாகராஜன் (சுயே) - 211

எம்.பிரதீப் (புதிய தமிழகம்) - 203

எஸ்.பாபு (சுயே) - 197

பி.ராமுத்தேவா் (அஇபுமமுக) - 184

பி.சீனிவாசன் (சுயே) - 176

ஆா்.உமா் அலி (சுயே) - 103

எஸ்.கோபிகிருஷ்ணபிள்ளை (ராஷ்ட்ரிய சமாஜ் தளம்) - 96

எம்.சரண்யா (சுயே) - 88

எம்.அனீஸ்பாபு (சுயே) - 75

ஜெ.ஆரோக்கியதாஸ் (சுயே) - 56

ஆா்.காா்மேகம் (சுயே) - 54

டி.கணேஷ் பெருமாள் (சுயே) - 45

ஜி.ராஜேந்திரன் (சுயே) - 38

எம்.முனியப்பன் (சுயே) - 32

நோட்டா - 833