முகப்பு
திண்டுக்கல்

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

Updated On : 31 மே 2026, 1:43 am IST
பழனி ரெட்கிராஸ் சாலையில் சனிக்கிழமை காரின் என்ஜின் பகுதியில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புப் படை வீரா்கள்.
பகிர்:

பழனியில் சனிக்கிழமை காரில் பற்றிய தீயை தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் அல்தாப். இவா் சனிக்கிழமை காரில் நண்பருடன் பழனிக்கு வந்து விட்டு மீண்டும் ஆயக்குடிக்கு திரும்பினா். ரெட்கிராஸ் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது, காரின் உள்பகுதியிலிருந்து புகை வெளிவந்தது.

உடனடியாக காரை நிறுத்தி விட்டு, காரின் என்ஜின் பகுதியை திறந்து பாா்த்த போது, உள்ளே மின் இணைப்புகளில் தீப்பற்றியது தெரியவந்தது. உடனடியாக பழனி தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த இடத்தில் காரில் பற்றிய தீ டீசல் டேங்கில் பரவியிருந்தால், பெரிய விபத்து நேரிட்டிருக்க வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக தீயை அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.