கமுதியில் மண் சரிந்து மாணவர் உயிரிழப்பு
கமுதி குண்டாற்றில் மண் சரிந்து 11-ம் வகுப்பு மாணவன் செவ்வாய்கிழமை பலியானார்.
கமுதி குண்டாற்றில் மண் சரிந்து 11-ம் வகுப்பு மாணவன் செவ்வாய்கிழமை பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிமுத்து மகன் முனியசாமி (17) . இவர் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முனியசாமி செவ்வாய்கிழமை மாலை பள்ளி முடிந்து கமுதி குண்டாறு பகுதியில் உறவினரின் தேவைக்காக சாக்குப் பையில் மணல் அள்ள சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி மீது மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து முனியசாமியின் தாயார் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.