முகப்பு
ராமநாதபுரம்

கமுதி வேளாண் கல்லூரியில் விவசாயிகளுக்கு பயிற்சி

கமுதி அருகே வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு கோடைபருத்தியில்

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:23 am IST
பகிர்:

கமுதி அருகே வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வ மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு கோடைபருத்தியில் பிபிஎப்எம் தெளிப்பு பற்றிய செயல் விளக்கம் செவ்வாய்கிழமை அளிக்கப்பட்டது.
   வறட்சியால் வயல் வெளிகளில் வாடி வரும் பயிர்களை மீட்க இளஞ்சிவப்பு மெத்தைலோ பாக்டீரியம் ( பி.பி.எம்.)  எனும்- ஒரு புதிய தொழில் நுட்பமானது தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம் கோவையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில்  கமுதி  நம்மாழ்வார் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் சு. மணிசேகரன்,  விவசாயிகளுக்கு பிபிஎப்எம் எவ்வாறு தெளிப்பது, எப்பொழுது தெளிப்பது, என்பது பற்றி   விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினர் . அப்போது அவர்கள் கூறியதாவது:  எல்லாப் பயிர்களுக்கும் 1 சதவீதம் கரைசலை காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கலாம். அவ்வாறு தெளிப்பதால் பயிர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை வறட்சியை தாங்கி வளரும். ஓவ்வொரு பயிரின் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்து 15 நாட்கள்  இடைவெளியில் 2 அல்லது 3 தெளிப்புகள்  பயிரின் வளர்ச்சி காலத்தில் தேவைப்படும் . எனவே தற்போது நிலவிவரும் கடுமையான  வறட்சியில் விவசாயிகள் ஒரு சதவீதம் பிபிஎப்எம் திரவத்தை காலை அல்லது மாலையில் கைத்தெளிப்பான் கொண்டு இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.    இவ்வாறு தெளிப்பதால் வறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது. விதை முளைப்புத் திறன் அதிகரிக்கிறது. நாற்றுக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலத்தைக் குறைக்கிறது. பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிரிக்கிறது. மகசூல் 10 சதவிகிதம் அதிகரிக்கிறது  என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments