ராமநாதபுரத்தில் இன்று கடையடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்ய
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக வர்த்தக சங்க தலைர் பா.ஜெகதீசன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், காவிரி நீரை தமிழகத்துக்கு தடையின்றி வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கடையடைப்பு செய்வது என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வர்த்தகர்கள் கடையடைப்பு செய்ய இருப்பதால் பொதுமக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காவேரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று (வியாழக்கிழமை ) ஒரு நாள் மட்டும் முழு கடை அடைப்பு நடத்துவதாக வர்த்தக சங்க தலைவர் எஸ்.முத்துராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.