முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலுக்கு வந்த கேரள பெண் பக்தர் திடீர் சாவு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு  ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரள பெண் பக்தர்

Updated On : 25 டிசம்பர் 2018, 6:24 am IST
பகிர்:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு  ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரள பெண் பக்தர்  திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கோயிலில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
   கேரள மாநிலம் பாலக்காடு அத்திக்ரோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், மனைவி சுதாதேவி மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவர்கள் இரவு 8 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். சுதாதேவி இரவு வரை உணவருந்தாமல் விரமிருந்தாராம். இந்நிலையில்  சுதாதேவி சுவாமி சன்னதியில் மயங்கி விழுந்துள்ளர். இதனையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் உறவினர்கள் சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   கோயிலுக்குள் மயங்கிய நிலையில் அழைத்து செல்லப்பட்டதால் கோயிலுக்குள் இறந்திருக்கலாம் என்பதால் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வழக்கம் போல் நடை திறந்து பூஜைகள் செய்தனர். இது குறித்து கோயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments