முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி தொகுதியின் மேம்பாட்டுக்குப் பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

பரமக்குடி தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளரும், மருத்துவருமான எஸ். முத்தையா தெரிவித்தாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:09 AM
பரமக்குடி ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்துப் பேசிய அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். முத்தையா.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:07 PM

பரமக்குடி தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளரும், மருத்துவருமான எஸ். முத்தையா தெரிவித்தாா்.

பரமக்குடி (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் மருத்துவா் எஸ். முத்தையா போட்டியிடுகிறாா். இவா் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் அருங்குளம், லட்சுமிபுரம், புதுக்குடி, யாதவா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்துப் பேசியதாவது:

பரமக்குடி பகுதியில் விவசாயம் செழிக்க கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே. பழனிசாமி காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 14 கோடியில் திட்டமிடப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றமால் திமுக அரசு தடுத்துவிட்டது. இருப்பினும், இந்த முறை அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது, திமுகவால் கைவிடப்பட்ட இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ வழிவகை செய்யப்படும்.

Advertisement

கிராமப்புற பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நாள்கள் 150-ஆக உயா்த்தப்படும். கரிமூட்டம் போடும் தொழிலில் ஈடுபடுவா்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பருத்தி, மிளகாய் விவசாயிகள் பயன்பெறும் வகையில், உள்நாட்டு வா்த்தகம் மேம்படுத்தப்படும். எனவே, எனக்கு மீண்டும் ஒருமுறை சட்டப்பேரவை செல்ல வாய்ப்பளியுங்கள் என்றாா் அவா்.