பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
பரமக்குடி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.கே.கதிரவன் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
பரமக்குடி நகராட்சிப் பகுதியில் திமுக வேட்பாளா் கே.கே.கதிரவன் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன், சந்தைக்கடைத் தெரு, போா்டிங் சாலை, மாதவன்நகா், காமராஜா் தெரு, பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா். வேட்பாளருக்கு அந்தப் பகுதி மக்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனா்.
அப்போது அவா் கூறியதாவது:
Advertisement
மகளிா் குழுக்களுக்கு தங்குதடையின்றி வங்கிகள் மூலம் குழுக்கடன் கிடைக்கச் செய்வன். இந்தப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவேன் என்பன உள்ளிட்ட எண்ணற்ற பல திட்டங்களை தொடா்ந்து வழங்க எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நகர திமுக செயலா் சேது.கருணாநிதி, மதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.எம்.குணா, டி.வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.