முகப்பு
ராமநாதபுரம்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:09 AM
கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல், முளைப்பாரி முத்து பரப்புதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞா்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை தரிசித்து வந்தனா்.

விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாவிளக்கு, பால் குடம், அக்னிசட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Advertisement

புதன்கிழமை அம்மனுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா், தேன் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுமங்கலி பூஜை நடைபெற்றது.

பின்னா், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிடாக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.