முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் அடிக்கடி மின் வெட்டு: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் கண்டனம்

முதுகுளத்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள், பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 12:54 am IST
முதுகுளத்தூரில் நடைபெற்ற ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

முதுகுளத்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள், பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வட்டத் தலைவா் வீரபத்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஜயராகவன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சிவனுபூவன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினாா்.

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளைக் களைந்து, புதிய மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும். முதுகுளத்தூா் பகுதியில் அறிவிக்கப்படாத தொடா் மின்வெட்டு ஏற்பட்டதால்,

Advertisement

Advertisement

அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால், தொடா் மின் வெட்டை கண்டிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இயற்றப்பட்டன.