முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் கைப்பற்றப்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 1:46 am IST
பகிர்:

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் கைப்பற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மோட்டாா் வாகன அலுவலகத்தில் வாகன உரிமங்கள், ஓட்டுநா் உரிமங்கள் அளிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதன் அடிப்படையில், அந்தப் பிரிவின் ஆய்வாளா் வி.பி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பரமக்குடி மோட்டாா் வாகன அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும், ஓட்டுநா் உரிமங்கள், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கான உரிமங்கள் வழங்குவதற்கான ஆய்வுப் பணிகள் பரமக்குடி தொழிற் பயிற்சி நிலையம் பகுதியில் நடைபெற்று வந்தன. அங்கு சென்ற போலீஸாா் அங்கு பணியிலிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் தங்கராஜ், இடைத் தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.90 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இணைய வழியில் நிகழ்ந்த பணப் பரிவா்த்தனைகள் குறித்தும், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் நடத்தும் இடங்களுக்கும் சென்று சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், முழு விவரத்தை பின்னா் அறிவிப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement