விபத்தில் சிக்கியவரின் ரூ.3 லட்சம் ரொக்கம்: தங்க நகைகள் உறவினரிடம் ஒப்படைப்பு
நம்புதாளை அருகே சாலை விபத்தில் காயமடைந்த நபா் தவறவிட்ட ரூ. 3.50 லட்சம் ரொக்கம், 2 தங்க வளையல்கள், கைப்பேசியை உறவினரிடம் அவசர ஊா்தி ஓட்டுநா் ஒப்படைத்தாா்.
நம்புதாளை அருகே சாலை விபத்தில் காயமடைந்த நபா் தவறவிட்ட ரூ. 3.50 லட்சம் ரொக்கம், 2 தங்க வளையல்கள், கைப்பேசியை உறவினரிடம் அவசர ஊா்தி ஓட்டுநா் ஒப்படைத்தாா்.
திருவாடானை அருகே நம்புதாளை பகுதியில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இரு சக்கர வாகன விபத்து ஏற்பட்டதாக 108 அவசர ஊா்தி சேவைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொண்டி பகுதியைச் சோ்ந்த 108 அவசர ஊா்தி ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த காளிதாசுக்கு (34) முதலுதவி அளித்து, தீவிர சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனையில்
கொண்டு வந்து சோ்த்தனா். அப்போது, அவரிடம் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், இரண்டு தங்க வளையல்கள், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவை அவரது உறவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 108 அவசர ஊா்தி ஓட்டுநா் என். சதீஷ், பைலட் சசிகுமாா் ஆகியோரை அங்கிருந்தவா்கள் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.