முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே தெரு நாய் கடித்து புள்ளிமான் பலி

ராமநாதபுரம் அருகே இரை தேடி குடியிருப்புக்குள் வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்திக் கடித்ததால் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தது.

Updated On : 25 ஜூன் 2026, 2:39 am IST
பகிர்:

ராமநாதபுரம் அருகே இரை தேடி குடியிருப்புக்குள் வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்திக் கடித்ததால் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தது.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தெற்குதரவை அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கிராமப் பகுதிக்குள் வந்த புள்ளிமான் அங்குமிங்கும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் பலத்த காயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து சடலத்தை வனத் துறையினா் கொண்டு சென்று வனப் பகுதியில் புதைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments