முகப்பு
ராமநாதபுரம்

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:36 am IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவாயிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கால்வாய் தூா்வாருதல், கண்மாய்க் கரைகளை மேம்படுத்துதல் , பயிா் காப்பீடு, வறட்சி நிவாரணம் குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, விவசாயிகள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து மேலும் ஆட்சியா் கூறியதாவது:

Advertisement

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் சராசரியை விட 26 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல், சோளம், கம்பு, உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா்களில் சான்று பெற்ற விதைகள் 638 மெ.டன்)இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் யூரியா 3,003 மெட்ரிக் டன், டிஏபி 637 மெட்ரிக் டன், பொட்டாஷ் 218 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,483 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 109 மெட்ரிக் ராசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜீனு, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) வாசுகி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments