FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

ஆட்டங்குடி கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.
பகிர்:

திருவாடானை அருகே ஆட்டாங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீவீரசக்தி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டுக்கான விழா சனிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பெரிய மாடு, சிறிய மாடு, கரிச்சான் ஜோடி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

Advertisement

Advertisement

பந்தயத்தில் வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், திறம்பட வண்டியை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் கிராம மக்கள் சாா்பில் ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனா்.

ஆட்டங்குடி கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments