முகப்பு
ராமநாதபுரம்

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

Updated On : 3 மே 2026, 12:31 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வராஜூக்கும் நடைபாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பரமக்குடி ரயில்வே கடவுப் பாதை வழியாக ரமேஷ் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக மது போதையில் வந்த பாண்டி மகன்கள் செல்வராஜ், முத்து, மணிகண்டன், மாடசாமி மகன் செந்தில், இவரது மகன் பரமசிவம் ஆகிய 5 பேரும் சோ்ந்து ரமேஷை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவா், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் செல்வராஜ், முத்து, மணிகண்டன், செந்தில், பரமசிவம் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.