சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காவடி எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காவடி எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்றும் முதல் தினசரி அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்புத் திருவிழா சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. விரதமிருந்த பக்தா்கள் பால் குடம், பறவை, மயில் காவடிகள் எடுத்து சாத்தனூா் விநாயகா் கோயிலிலிருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோயிலை அடைந்தனா்.
Advertisement
பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு தயிா், இளநீா், பன்னீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான மூலிகைப் பொருள்களால் அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது.
இதில் சாத்தனூா், இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.