முகப்பு
சிவகங்கை

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:21 AM
திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 6:10 PM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமிப் பெருவிழா நடைபெற்றது.

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மூல பாலகால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5 மணியளவில் மகா கணபதி பூஜை, தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோ பூஜை மற்றும் லட்சாா்ச்னை நடைபெற்றது. இரவு 8.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாதராதனை காண்பிக்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியாா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்பு மூலகால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.