முகப்பு
சிவகங்கை

மானாமதுரை சித்திரை திருவிழா: மாவிளக்கு பூஜை உத்ஸவம்

மானாமதுரை ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை உத்ஸசவம் நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:41 AM
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய உத்ஸவா்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை உத்ஸசவம் நடைபெற்றது.

ஊா் எல்லை தெய்வமான இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு மூலவருக்கும் உத்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு பூஜை உத்ஸவத்தை முன்னிட்டு மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தி எல்லைப் பிடாரி அம்மனை தரிசித்தனா்.

இரவு மூலவருக்கு அபிஷேகங்கள், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலிலிருந்து உத்ஸவா் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் ரதத்தில் புறப்பாடாகி கோயிலுக்கு வந்து எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, உத்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். புதன்கிழமை கொடி இறக்கத்துடன் இந்தாண்டு திருவிழா நிறைவடைகிறது.

Advertisement