இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் மானாமதுரை (தனி) தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வெள்ளி, சனிக்கிழமைகளில் வாக்குகள் சேகரித்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் மானாமதுரை (தனி) தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வெள்ளி, சனிக்கிழமைகளில் வாக்குகள் சேகரித்தாா்.
திருப்புவனம் நகா், இளையான்குடி ஒன்றியம் ஆரணையூா், ராஜபுலியேந்தல், சாத்தனி, பெருமானேந்தல், சோலை ஊரணி, அரண்மனைகரை, கலங்கநாதன்கோட்டை, வீரந்திடல், கல்லாணி உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வெள்ளி, சனிக்கிழமைகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, திமுக தோ்தல் பொறுப்பாளா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் தமிழரசன், திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement