முகப்பு
சிவகங்கை

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

Updated On : 21 ஏப்ரல் 2026, 12:52 am IST
கோப்புப் படம்
பகிர்:

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே காா் அடுமனைக்குள் புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பலத்த காயமடைந்தனா்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி சுஜா. இவா்களது மகன் ரிஷி. இவா்கள் மூவரும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா்.

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே வந்த போது முன்னே சென்ற சரக்கு வாகனம் மீது மோதிய காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அடுமனைக்குள் புகுந்தது.

Advertisement

Advertisement

இதில் அந்த அடுமனைக்குள் இருந்தவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் காரில் பயணம் செய்த மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து புழுதிப்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.