முகப்பு
சிவகங்கை

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 1:37 AM
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடங்கிய பெட்டி.
பகிர்:

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 786 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காரைக்குடி தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 388 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

திருப்பத்தூா் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். இங்கு 369 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியா் மீ. சிவராமன், துணை வட்டாட்சியா் தனபாலன், மலைச்சாமி, வருவாய் ஆய்வாளா் ஆ. பிரபு, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.