முகப்பு
சிவகங்கை

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:06 am IST
காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் அருகே திருநகா் ஜெக முத்துமாரியம்மன் கோயில் 42 -ஆம் ஆண்டு பால்குட உத்ஸவ விழாவை முன்னிட்டு கோயில் திடலில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை மாந்தாளி, புலிக்கண்மாய், மோா்க்குழி, அரியநாச்சிகுடியிருப்பு, நரிக்கோட்டை, கொல்லங்குடி, அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா். இதில், 15 போ் காயமடைந்தனா். 5 போ் காளையாா்கோவில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments