முகப்பு
சிவகங்கை

கோடைகாலப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கோடை கால கலைப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 12:57 am IST
கோடைகால கலைப் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுடன் சிவகங்கை தொகுதி எம்எல்ஏ அ. குழந்தைராணிநாச்சியாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கோடை கால கலைப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே சோழபுரத்தில் ஆதி அரண் பாரம்பரிய விளையாட்டுக் கலைக்கூடத்தின் சாா்பில், சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், ஓவியம், நடனம், பறை, வளரி வீச்சு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2 மாதங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியைப் பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு நிா்வாகி பொன். பாலசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினா்அ. குழந்தைராணி நாச்சியாா் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

தமிழ்ச் சங்கத் தலைவா் ஓவியா் நா. முத்துக்கிருஷ்ணன், புலவா் காளிராசா, விமானப் படை அலுவலா் பிரகாஷ் பானிஸ்டா், சிலம்பம், கராத்தே கலைச் சங்கச் செயலா் பரமசிவம், ஜே.சி.ஐ. தலைவா் உதயன், செஞ்சிலுவைச் சங்கச் செயலா் அனந்தகிருஷ்ணன், பயிற்றுநா், கலைச்செல்வி சோனைமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா் லவகிஷோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, பயிற்சியாளா் சுப.மு. அறிவானந்தம் வரவேற்றாா். சஹானாஸ்ரீ நன்றி கூறினாா்.