முகப்பு
சிவகங்கை

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்ணின் செயலால் பரபரப்பு

Updated On : 9 ஜூன் 2026, 3:12 am IST
தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெண் ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ஜெயங்கொண்டநிலை பகுதியைச் சோ்ந்த அன்பு தனம் என்பவா், நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்து வந்த நிலையில், அவரது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அன்பு தனம் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

பின்பு, அதைப் பறிமுதல் செய்து, அவரை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.