சிங்கம்புணரி பகுதியில் ஜூன் 20-இல் மின் தடை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிங்கம்புணரி, அ.காளாப்பூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சிங்கம்புணரி துணை மின் நகா், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு, அ. காளாப்பூா், ந.ய.மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement