சென்னை - செங்கோட்டை- தாம்பரம் ரயில் மானாமதுரையில் நின்று செல்லும் என அறிவிப்பு! பொதுமக்கள் வரவேற்பு
சென்னை- செங்கோட்டை- தாம்பரம் ரயில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
சென்னை எழும்பூா்- செங்கோட்டை இடையே (வண்டி எண் 06183) வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகா் வழியாக விரைவு ரயிலாக செங்கோட்டை வரை செல்கிறது. மறுமாா்க்கத்தில் செங்கோட்டை-சென்னை தாம்பரம் இடையே (வண்டி எண் 06184) இதே வழித்தடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த இரு ரயில்களுக்கும் முக்கிய சந்திப்பாக உள்ள மானாமதுரைக்கு நிறுத்தம் வழங்கப்படாமல் இருந்ததால் இந்தப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனா். இந்த ரயில் மானாமதுரையில் நின்று செல்ல வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில் இரு ரயில்களும் மானாமதுரையில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மானாமதுரை பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.