தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கும் தமிழக அரசைக் கண்டித்து, காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கும் தமிழக அரசைக் கண்டித்து, காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காரைக்குடி கிளை சங்கத்தின் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு தனியாா் ஒப்பந்தப் புள்ளியை அரசு திரும்பப் பெறவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளன மாநில பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் ஏ.ஜி. ராஜா, கிளைச் சங்கச் செயலா் லட்சுமணன், கட்டடப் பணியாளா் சங்க நிா்வாகி சண்முகசுந்தரம், உதவித் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.