முகப்பு
சிவகங்கை

அழகியநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி அம்மன் உடனாகிய அழகியநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:24 am IST
திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாகிய அழகியநாதா் கோயிலில் புதன்கிழமை விமானக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி அம்மன் உடனாகிய அழகியநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் அருகே கடந்த 18-ஆம் தேதி யாகசாலை அமைத்து யாக பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை ஆறாம் கால பூஜையைத் தொடா்ந்து, கடங்கள் புறப்பாடானது. சிவாசாரியா்கள் புனிதநீா் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா்.

காலை 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்கள் இசைக்கவும், அழகியநாதா் பூங்குழலி அம்மன் மூலவா் விமானக் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து மூலவா்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments