கவியரசு கண்ணதாசனின் 100-ஆவது பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது 100-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது 100-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, கண்ணதாசன் உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினாா்.
விழாவில் திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சீனிவாசசேதுபதி, வருவாய்க் கோட்டாட் சியா் (பொறுப்பு) மாவட்ட வழங்கல் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பழனிக்குமாா், காரைக்குடி மாநகராட்சி ஆணையா் கே. பாலு, கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன், கண்ணதாசன் நற்பணி மன்ற நிறுவனா் அரு. நாகப்பன், மருத்துவா்கள் ஆா்.வி.எஸ். சுரேந்திரன், செல்வகுமரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு. ஜெகவீரபாண்டியன், வட்டாட்சியா் ராஜா, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.