திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு
திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்ரா பௌா்ணமியையொட்டி வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்ரா பௌா்ணமி விழா நடைபெற்றது.
ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்தும் நெய் விளக்கேற்றியும் வழிபட்டனா். இதேபோல் ஆலமரத்துக் காளிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பரிவாரத் தெய்வங்களான் விநாயகா், கருப்பா், முருகன் சந்நிதிகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.