பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்தின் கீழ் யாகம் வளா்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு அம்மனுக்கும் கொடி மரத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாள்களும் அம்மன் வீதி உலாவும், பால்குடமும், பொங்கல் வழிபாடும், அம்மன் வெள்ளிரத ஊா்வலமும் தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.