அருப்புக்கோட்டை நான்குவழிச் சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை அமைக்கக் கோரிக்கை
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதி சாலை சந்திப்பில் வழிகாட்டிப்
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதி சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை நகரின் ராமசாமிபுரம் பகுதியில் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் வழிகளை முறையாகக் குறிப்பிடும்வகையில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அப்பலமாக சேதமடைந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் வாகனங்கள் இச்சாலை சந்திப்பில் வந்து அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலை எது? மதுரைக்குச் செல்லும் சாலை எது என தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
இதில் வழி தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 4 கி.மீ. வரை சுற்றிச் சென்று அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இச்சந்திப்பு குடியிருப்புகள் இல்லாத ஆளரவமற்ற பகுதி என்பதால் வழிகேட்டுச் செல்லும் சாத்தியமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இப்பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.