சிவகாசியில் தீக்குளித்து காயமடைந்த பெண் சாவு
சிவகாசியில் மது குடிப்பதை கணவர் கைவிடாததால் தீக்குளித்த மனைவி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
சிவகாசியில் மது குடிப்பதை கணவர் கைவிடாததால் தீக்குளித்த மனைவி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
சிவகாசி சிறுகுளம் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் சர்தார். இவரது மனைவி செய்யது அலிபாத்திமா(34). சர்தார் தினசரி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். மது அருந்தக்கூடாது என மனைவி மற்றும் உறவினர்கள் கூறியும் சர்தார் மது அருந்துவதை நிறுத்தவில்லை. இதனால் செய்யது அலி பாத்திமா வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.