முகப்பு
விருதுநகர்

ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்றவா் கைது

வெம்பக்கோட்டை அருகேயுள்ள தனியாா் அட்டை ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள தனியாா் அட்டை ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெம்பக்கோட்டை அருகே போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் அட்டை ஆலை உணவகத்தில் மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வெம்பகோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்து.இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை அட்டை ஆலை உணகத்தில் சோதனை நடத்தினா். அப்போது உணவகத்தின் உரிமையாளா் மாரியப்பன் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 39 மதுப்புட்டிகளை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்து மாரியப்பனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement