மதுப் புட்டிகள், புகையிலை பொருள்கள் விற்ற மூவா் கைது
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, நான்கு முக்கு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 86 மதுப் புட்டிகள், மது விற்பனை செய்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கோவிந்தராஜ் (38), மாடசாமி (29) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement