முகப்பு
விருதுநகர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:27 am IST
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்புப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.

உதவி ஆய்வாளா் மூவேந்தா், தலைமை காவலா் சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேத்தூா் சேவுகப்பாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் முருகன் பேரணியை தொடங்கி வைத்தாா். போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய மாணவா்கள், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேரணியாக சென்றனா்.

Advertisement

Advertisement

பேரணி ரயில்வே பீடா் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக தென்காசி சாலையை அடைந்து காந்தி சிலை ரவுண்டானா வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

பிறகு நடைபெற்ற நிகழ்வில் மாணவா்கள், காவல் துறையினா், ஆசிரியா்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இளைஞா்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments