பயணிகள் ரயில் சேவை தொடக்கம்மயிலாடுதுறை
மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பாதையில் மங்கைநல்லூர், பூந்தோட்டம், சன்னாநல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பாஜக வழக்குரைஞர் கே. ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 7.35 மணிக்கு திருவாரூரை சென்றடைந்தது.
Advertisement
Advertisement
திருவாரூர் - மயிலாடுதுறை: திருவாரூர்-மயிலாடுதுறை இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
திருவாரூர்- மயிலாடுதுறை இடையே நாள்தோறும் காலை, மாலையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வரும் இந்த ரயில், திருவாரூரிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
இதே போல மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்தும், இரவு 8.40 திருவாரூரிலிருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.