நினைவு தினம்: பெரியார் சிலைக்கு மரியாதை
தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூரில்...
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்
மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில், நகரச் செயலர் மு. ராமதாசு, ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வம், ஒன்றியச் செயலர் கா. செல்வராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை. கௌதமன், நகரத் தலைவர் கோவி. அழகிரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
அண்ணா திராவிடர் கழகம்: இதேபோல், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலர் வி. திவாகரன், அமமுக மாநில தேர்தல் பிரிவுச் செயலர் கா. மலர்வேந்தன், அதிமுக ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் தலைமையிலும் தனித் தனியே கட்சியினர் வந்து மாலை அணிவித்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் தலைமையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அதன் கிளைத் தலைவர் ஆர். யேசுதாஸ் தலைமையில் மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து, மன்னார்குடி, கோட்டூர், வடுவூர் பகுதிகளில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.