முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி கோயிலில் இராப்பத்து 7-ஆம் நாள் வழிபாடு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உத்ஸவத்தின் 7-ஆம் நாள் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:12 am IST
பகிர்:

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உத்ஸவத்தின் 7-ஆம் நாள் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி டிச.8-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கியது. டிச.18-ஆம் தேதி நடைபெற்ற பரமபத வாசல் திறப்புக்கு பிறகு, இராப்பத்து உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதன் 7-ஆம் நாளான திங்கள்கிழமை ருக்மணி, சத்யபாமா சமேதராக உத்ஸவர் ராஜகோபால சுவாமி கல்யாணத் திருக்கோல அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் மன்னார்குடி வி. திருநாவுக்கரசு பிள்ளை மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments