ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை ரயில்வே கேட் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை ரயில்வே கேட் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம் ரயில்வே கேட் திங்கள்கிழமை காலை மூடப்பட்டபோது இரும்பு கம்பி (ராடு) உடைந்ததால்கேட்டை மூடி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சங்கிலிகளைக் கொண்டு ரயில் வரும் நேரங்களில் ரயில்வே கேட் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தினர். பின்னர், தொழில்நுட்பப் பிரிவினர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், பேருந்து பயணிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், தஞ்சையிலிருந்து வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் நீடாமங்கலத்தில் திசைமாற்றி மன்னார்குடிக்கு புறப்பட்டுச் செல்லும் வரை சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.