முகப்பு
திருவாரூர்

2479 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,479 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 91,79,099 மதிப்பிலான

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:31 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,479 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 91,79,099 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஒன்றியத்துக்குள்பட்ட 7 பள்ளிகளை சேர்ந்த 2,479 மாணவ, மாணவிகளுக்கு ரூ.91,79,099 மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து, கோட்டாட்சியர் முருகதாஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இருதயராஜ், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பாப்பா சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.